50 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு பெற்ற மகளை விற்க முயன்ற பெற்றோர்

சங்கரன்கோவிலில் 50 ஆயிரம் ரூபாய் ரூபாய்க்கு ஆசைப்பட்டுப் பெற்ற மகளை முன்பின் தெரியாத நபருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சித்த பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் விவாசரணை நடத்தி வருகின்றனர் பெண்ணை பணத்திற்கு விற்றுவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கார் நகர் 2-ம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் -மாரி தம்பதியினர் இவர்களது மகள் பேச்சியம்மாள் இவர் கூலி வேலை செய்து வருகிறார். பேச்சியம்மாளின் பெற்றோரிடம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கனகலட்சுமி மற்றும் மாரி ஆகிய திருமண தரகர்கள் திருமணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுத் தருகிறோம் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பேசசியமமாலை திருமணம் செய்து கொடுக்கச் சொல்லிச் சம்மதிக்க வைத்துள்ளனர் .

இதனைத் தொடர்ந்து திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. பேச்சியம்மாளின் பெற்றோரிடம் இப்போது முப்பதாயிரம் பணத்தைக் கொடுத்த கனகலட்சுமி மற்றும் மாரி மீதி பணத்தை ஈரோட்டில் தருகிறோம் தற்போது பெண்ணை ஈரோட்டிற்கு அழைத்துச் செல்கிறோம் , என்று கூறி நேற்று இரவே பெண்ணை மட்டும் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் . இதனையறிந்த பேச்சியமாளின் உறவினர்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டவே மாப்பிள்ளை யார் என்று தெரியாமல், பெண்ணை மட்டும் ஏன் அழைத்துச் செல்கின்றனர் என்று கேட்டுள்ளனர்.

பேருந்து நிலையத்திற்குச் சென்று அங்கு நின்று கொண்டிருந்த பேச்சியம்மாளை அழைத்துச் சென்று அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இது குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார் . இதில் தரகர்கள் இருவரும் பேச்சியம்மாளின் பெற்றோர்களிடம் பணம் கொடுத்து பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது. ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் யார் ? எதற்காக 50ஆயிரம் ரூபாய் கொடுத்து பெண்ணை மட்டும் அழைத்துச் செல்ல வேண்டும் , பெற்றோர்களே பணத்திற்காகப் பெண்ணை விற்க முயன்றார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

More News >>