தடைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியது ஒரு நீதிபதியின் முக்கிய கடமை: நீதிபதி ரமணா கருத்து
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னைப் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் குறித்து நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி என் வி ரமணா குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார் உள்ளார். அதில் அவர் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக நீதிபதி ரமணா செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார் . மேலும் ஆந்திர நீதிமன்ற செயல்பாடுகளில் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆந்திர மாநில அரசுக்கு எதிராக நடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ரெட்டியின் இந்த கடிதம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதி ரமணாவுக்கு ஆதரவாகப் பல வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பினார். ஜெகன்மோகன் ரெட்டி மீது நிதி மோசடி, ஊழல் புகார் கிரிமினல் வழக்குகள் உள்ளதால் அவரை பதவியை விட்டே நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஜி எஸ் மணியம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனிடையே மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி லட்சுமணன் இரங்கல் கூட்டத்தில் நீதிபதி ரமணா கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் , தனக்கு எதிரான அழுத்தங்கள் மற்றும் தடைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியது ஒரு நீதிபதியின் முக்கிய கடமை . தற்போதைய நிலையில் சுதந்திரமான நீதித்துறைக்கு இது மிகவும் அவசியமான ஒன்று . ஒருவர் நல்லபடியாக வாழ மனிதாபிமானம், பொறுமை, கடின உழைப்பு மற்றும் பிறரைப் பொறுமையுடன் எதிர்கொள்வது அவசி மாகும் . குறிப்பாக நீதிபதிகளாக இருப்பவர்களுக்குத் தனது கொள்கையில் பிடிமானமும், முடிவு எடுப்பதில் பயமின்மையும் அவசியம் தேவைப்படுகிறது” எனப் பேசி ஜெகன் மோகன் ரெட்டிக்கான விஷயத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.