நடிகையின் குழந்தையை கட்டிப்பிடித்து நாய் முத்தமழை..

நடிகை ஜெனிலியா தேஷ்முக் கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டார். 21 நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு தனி அறையிலிருந்தார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்துமிருந்து மீண்டார்.தனது சமீபத்திய நேர்காணலில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தனக்கு ஏற்பட்ட அனுபவம், அதிலிருந்து குணமாக நடத்திய போராட்டம் பற்றி விளக்கினார்.

அவர் கூறியதாவது:சுத்தமாக, பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் கொரோனா தாக்குதல் எப்படி ஏற்பட்டது என்று அறிய முடியவில்லை. நோய்த் தொற்று அறிகுறி தெரிந்தவுடன் அதற்கான பரிசோதனை செய்த போது அது உறுதியானது. உடனடியாக தனிமைப்படுத்தபட்டேன்.

தனிமையில் நான் இருந்த காலம் மிகவும் கடுமையானது. துணைக்கு இணையதளம் இருக்கிறதே கவனத்தைத் திருப்பி முகநூல் மற்றும் டிஜிட்டல் என்று நேரத்தைக் கழித்துவிடலாம் என்று அதில் மூழ்கினாலும் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு என்னை எதிலும் கவனத்தைச் செலுத்த விடவில்லை. கவனத்தைத் திசை திருப்பினால் தனிமையை வென்றுவிட முடியாது என்பதை அனுவரீதியாக உணர்ந்தேன். தனிமையில் என் கணவர், குழந்தைகள், மாமியார் ஆகியோரின் அரவணைப்பை ரொம்பவே மிஸ் செய்தேன்.

தனிமையின் கொடுமையை அனுபவிக்காமலிருக்க ஒரே வழி நோய் தொற்று வராமல் பாதுகாப்பாக இருப்பதுதான். அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள். அத்துடன் வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே திறவுகோல் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது தான் இவ்வாறு ஜெனிலியா கூறினார்.கொரோனா தொற்றிலிருந்து மீண்ட ஜெனிலியா தற்போது குழந்தைகளுடனும், தான் வளர்க்கும் செல்ல நாயுடனும் விளையாடி ரிலாக்ஸ் ஆகி வருகிறார்.

ஜெனிலியாவின் குழந்தைகள் இருவரும் அவர் வளர்க்கும் நாயைவிடச் சிறியவர்கள். ஆனால் அவர்களுடன் ஜெனிலியா தனது நாயை பழகவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. சராசரியாக வளர்ந்த ஒரு சிங்கம் போன்ற தோற்றத்திலிருக்கும் இருக்கும் அந்த நாய் ஜெனியிலியாவின் குழந்தைகளை கட்டிபிடித்து கொஞ்சுகிறது. அவர்களின் முதுகில் இரண்டு கால்களை வைத்து ஜம்ப் செய்கிறது. கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் தருகிறது.

விளையாட்டு விபரீதமாகிவிடுமோ என்று ஜெனிலியா வெளியிட்ட வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது ரசிகர்களுக்குப் பயமாக இருந்தபோதும் ஜெனிலியாவோ, விலங்குகளோடு குழந்தைகளைப் பழக விடுங்கள் என்று எல்லோருக்கும் அட்வைஸ் செய்திருக்கிறார். நான்கு கால் நண்பர்கள் காட்டும் அன்பு ஈடில்லாதது. எனது குழந்தைகளை சிறுவயதிலிருந்தே விலங்குகளுடன் நான் பழகவிடுகிறேன். அப்போது தான் அவைகள் காட்டும் அன்பைக் குழந்தைகளால் உணர முடியும். நீங்களும் நான்கு கால் நண்பனை வளர்த்துப்பாருங்கள் அதன் அன்பும் பாசமும் புரியும் என ஜெனிலியா கூறினார்.

More News >>