வனிதாவின் உண்மை முகம்.. பீட்டர் பாலை ஓட ஓட விரட்டிய வனிதா!! பீட்டர் பாலுக்கு சங்கு ஊதும் நெட்டிசன்கள்..
கொரோனா காலத்தில் படு பொழுதுபோக்காக அமைந்தது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம். இந்த திருமணத்திற்கு பல வித எதிர்ப்புகள், விமர்சனங்கள் என்று ஒவ்வொரு பாதையில் இருந்து வனிதாவை நெருக்கியது. ஆனால் தடைகளை எதிர்த்து பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். வளர்ந்த பிள்ளைகளை பக்கத்தில் வைத்து கொண்டே பீட்டர் பாலும் வனிதாவும் கும்மாளம் அடித்தனர்.அதுவும் சில தினங்களுக்கு முன்பு கணவர் பீட்டர் பாலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக குடும்பத்துடன் கோவா சென்றனர்.
அங்கு இருவரும் அடித்த லூட்டிக்கு அளவே இல்லாமல் போனது. அது மட்டும் இல்லாமல் அடித்த லூட்டியை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த சம்பவத்தில் இருந்தே நெட்டிசன்கள் இருவரையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்நிலையில் கோவாவிற்கு சென்று திரும்பிவருகின்ற வேளையில் பீட்டர் பால் குடித்துவிட்டு தலகால் புரியாமல் நடந்து கொண்டதால் கோவப்பட்ட வனிதா பீட்டர் பாலை அடி வெளுத்து வாங்கி நடுரோட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளார்...
இதனால் பீட்டர் பால் இரவில் கூட வீட்டுக்கு செல்லாமல் ஆபீஸ் மற்றும் பார்க்கிங் ஏரியாவில் குடித்து விட்டு உருண்டு இருக்கிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளது. கிடைத்த துண்டு சீட்டை வைத்து வனிதா மற்றும் பீட்டர் பாலை பிரித்து மேய்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.