அம்பானி வீட்டில் டும்..டும்..டும்..! நாடு தாங்குமா..?
அம்பானி இல்ல திருமண விழா விரைவில் நடக்கவிருப்பதையடுத்து நாடே அதிர ஒரு பிரத்யேக விழா காத்திருப்பதாக அம்பானி குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இந்தியாவையே ஒரே குடும்பம் கைக்குள் வைத்திருக்கிறது என்றால் அது அம்பானியின் குடும்பமாகத்தான் இருக்கும். இவர்கள் தொழில் வளர்ச்சிக்காக நாட்டின் பிரதமரே விளம்பரப்படம் நடித்துக்கொடுப்பார். அவ்வளவு பிரசித்தி பெற்ற குடும்பத்தில் இப்போது கல்யாண மேளம் கொட்டப்போகிறது.
முகேஷ் அம்பானி - நிடா அம்பானி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்த மகனும் ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகக்குழு உறுப்பினருமான ஆகாஷ் அம்பானிக்குத்தான் நேற்று மாலை திருமணப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதன்படி, ஆகாஷ் தனது பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தா என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.
இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் ஐந்து விழாவாக மும்பையில் நடக்க உள்ளது. ஸ்லோகா மேத்தா மும்பையின் முக்கியத் தொழிலதிபர்களுள் ஒருவரான வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மூன்றாவது மகள் ஆவார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com