தல ஒருவர் தான்... ரசிகர்களை குஷிப்படுத்திய கேஎல் ராகுல்!
நடப்பு ஐபிஎல் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் கேப்டனாக சோபிக்க தவறினாலும், ஒரு வீரராக சூப்பர் பார்மில் இருக்கிறார். அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ராகுல் முதலிடத்தில் இருக்கிறார். இதற்கிடையே, சில மணி நேரங்களுக்கு முன்பு, ராகுல் ரசிகர்களின் கேள்விக்கு டுவிட்டரில் பதில் அளித்து வந்தார். அதில் குறிப்பாக ஒரு போட்டோவுக்கு அவர் அளித்த பதில் தற்போது பல்வேறு மனங்களை வென்று வருகிறது. ரசிகர் ஒருவர் ராகுல் ஸ்டெம்பிங் செய்யும் போட்டோவை பதிவிட்டு ``என்னுடைய தல'' என்று பதிவிட்டு இருந்தார்.
இதனை டேக் செய்த, ராகுல், 'தல என்று ஒருவர் தான் இருக்கிறார் அவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும்' என்று தோனியை குறித்து நச் பதில் கொடுத்தார். இதற்கு தான் ரசிகர்கள் தற்போது பலத்த வரவேற்பு கொடுத்து வருகின்றனர். மேலும் பல்வேறு கேள்விகளுக்கு பாராட்டுகளுக்கு பதில் கொடுத்து அசத்தி வருகிறார் ராகுல்.