குழந்தைகளுக்கு விருப்பமான மொறு மொறு ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை..
மாலை வேளையில் குழந்தைகளை மகிழ்விக்க ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரையை செய்து கொடுங்கள். இந்த கொரோனா காலத்தில் வெளியே இருந்து உணவு வாங்க தயங்குகிறோம். இதனால் வீட்டில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவை செய்து கொடுத்து மகிழ்வியுங்கள். சரி வாங்க ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரையை எப்படி கிரிஸ்பியாக செய்வது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:-உருளைக்கிழங்கு -4ரவை -1 கப்நீர் -2 கப்கறிவேப்பிலை -தேவையான அளவுகொத்தமல்லி இலை -தேவையான அளவுபச்சை மிளகாய் -4வெங்காயம் -2உப்பு -தேவையான அளவுஎண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:-ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு ரவை சேர்த்து கட்டி வராமல் நன்றாக கிளறி விட வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் மற்றும் உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி வேக வைக்கவும். வெந்த பிறகு தோலை உரித்து உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.
பிறகு ரவையில் மசித்த கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மற்றும் கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, ரவையை ஃபிங்கர் போல் உருட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் உருட்டி வைத்த ரவை உருளைக்கிழங்கை எண்ணையில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை கரண்டியால் திருப்பி விடவும்..
நன்கு பொறிந்தவுடன் ஒரு தட்டில் வைத்து தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிடால் கலக்கல் சுவையாக இருக்கும்..