2 வருடங்களாக சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு... தாய் கைது...!
அமெரிக்காவில் இரண்டு வருடங்களாக 12 வயதான தனது சொந்த மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்த தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சில சமயங்களில் மனிதர்கள் மிருகங்களை விட மோசமாக நடந்து கொள்வது உண்டு. இப்படி ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் உள்ள டெக்சாசில் நடந்துள்ளது. டெக்சாசை சேர்ந்தவர் பிரிட்னி ரூலி (34). இவருக்கு 12 வயதில் ஒரு மகன் உண்டு. இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் பிரிட்னி ரூலி தனது மகனை மிரட்டி வீட்டில் வைத்துக் கடந்த 2018 முதல் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று தாய் பிரிட்னி மிரட்டியதால் அந்த சிறுவன் யாரிடமும் இதுகுறித்து கூறவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சிறுவன் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் தனது தாய் தன்னை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வரும் விவரத்தைக் கூறியுள்ளான். இதில் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உடனடியாக போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு பிரிட்னியை பிடித்து விசாரித்தனர்.முதலில் பிரிட்னி தன் மீது அபாண்டமாகப் புகார் கூறப்பட்டுள்ளதாகக் கூறி அதை மறுத்தார். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் வேறு வழியில்லாமல் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். கடந்த இரண்டு வருடங்களாக மகனை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வருவதாக அவர் கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.