தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஈடுகட்ட.. முன்னணி நடிகை நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தால் திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடிகர்களின் சம்பளத்தை குறைத்து கொள்ளும்மாறு தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற திரை உலகம் வற்புறுத்தி வருகிறது. இதையடுத்து பல நடிகர்கள் சம்பளத்தை குறைத்து உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
விஜய் ஆண்டனி தற்பொழுது நடிக்க இருக்கும் 3 படங்களை சேர்த்து ஒரு கோடி குறைத்துள்ளார். இதை அடுத்து ஹரிஷ் கல்யாண், மீனா, மோகன்லால் ஆகிய அனைவரும் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர். இதை அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் மலையாள திகில் படமான 'நிழல்' படத்தில் தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழ் திரைபடங்களில் நடிக்க தலா 4 கோடி சம்பளமாக வாங்குவார் என்று குறிப்பிடத்தக்கது.