ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் இவர்தான்!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர், தாங்கள் வகித்த வந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ளனர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அந்த அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர். இதையடுத்து அவர்கள் இருவரையும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் உத்தரவிட்டதற்கிணங்க, தாங்கள் வகித்த வந்த பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு உள்ளனர்.

ஒரு பக்கம் இப்படி நடந்துகொண்டிருந்தாலும், தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய கட்டயமும் இருக்கிறது. இதையடுத்து, அணியை வழிநடத்த புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய நெருக்கடியில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தள்ளப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம், அணி நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்த பிறகு, விக்கெட் கீப்பர் டிம் பெயினை கேப்டனாக நியமனம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர். பெயின் இந்தப் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்தப் போட்டிக்கும், அதையடுத்து வரும் தொடர்களுக்கும் பொதுவான கேப்டன் சீக்கிரமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>