ஆதார் வைத்திருந்தால் அரசு தரும் ரூ.5000 பெறலாம்!

பிராதான் மந்திரி ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகள், தங்களின் கணக்கில் பணம் இல்லை என்றால் கூட ஓவர் டிராப்ட் முறையில் ரூ.5000 வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.

நாட்டிலுள்ள விவசாயிகள் உட்பட அனைத்து ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. பிரதமர் மோடியால் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய - மாநில அரசுகளின் மானிய நிதியுதவிகள் மூலம் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கும் கிஷான் கடன் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.ஜன் தன் மூலம் தொடங்கப்பட்ட கணக்கில் ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் ஓவர் டிராப்ட் முறையில் பயனாளிகள் ரூ. 5000 எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கணக்கில் கடந்த ஆறு மாதமும் குறைந்தபட்ச இருப்புத் தொகையைச் சரியாக கடைபிடுத்து இருக்க வேண்டும்.இந்த கணக்கில் டெபிட் கார்ட் எனப்படும் ATM பெற்றிருக்க வேண்டும். மேலும் பரிவர்த்தனைகளை மேற் கொண்டிருக்க வேண்டும்.

More News >>