என்னது டீ விலை 135 ரூபாயா? - ஏர்போர்ட்டில் அதிர்ச்சியடைந்த ப.சிதம்பரம்
சென்னை விமான நிலையத்தில் விலையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் வாங்க மறுத்ததாகவும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட முதல் ட்விட்டர் பதிவில், ‘சென்னை விமான நிலையத்தில் உள்ள ‘காபி டே’வில் டீ கேட்டேன். சுடு தண்ணீரும், டீ பையும் கொடுத்தனர், விலை ரூ.135. அதிர்ச்சியடைந்து, வாங்க மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா? தவறா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு பதிவில், ‘காபி விலை ரூ.180. அதை யார் வாங்குவார்கள்? எனக் கேட்டேன். அதற்கு ‘பலர் வாங்குகிறார்’ என பதில் வந்தது. நான் நடப்பு நிகழ்வில் இருந்து காலாவதியாகி விட்டேனோ?’ எனவும் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com