பிக்பாஸ் வீட்டில் அடிதடி தள்ளுமுள்ளு.. அரக்க-ராஜ குடும்பமான போட்டியளர்கள்..
நாளுக்கொரு வித்தியாசமாக பிக்பாஸ் வீட்டை மாறி வருகிறார்கள் போட்டியாளர்கள். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட நிலையில் தற்போது ராஜ குடும்பம், அரச குடும்பமாக பிரிந்து இரு அணிகளாக இன்று மோதிக் கொள்கின்றனர்.
சொர்கபுரி ராஜ குடும்பம் மாயபுரி அரக்க குடும்பம் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட அதில் மொட்டை சுரேஷ் அரக்க குடும்ப லீடராக இருக்கிறார். பாலாஜி முருகதாஸ் அணி சொர்க்கபுரி ராஜ குடும்பமாக இருக்கிறது. இதில் ஏற்படும் மோதலில் வாக்குவாதம் தள்ளுமுள்ளு. அடித்து விரட்டுதல் எல்லாம் நடக்கிறது. இந்த கடும்போடியில் சிலையாக அமர்ந்து உணர்சிகளை கட்டுப்படுத்தி வெல்லுமா ராஜ குடும்பமா? என பிக்பாஸ் புரோமோ சுவாரஸ்யமா இன்று வெளியாகி இருக்கிறது. இரு அணியினரும் ராஜ வம்சம்போல் ஆடை ஆபரணங்களும், அரக்க கூட்டம்போல் கரியை பூகிக்கொண்டும் ஆளே அடையாளம் தெரியாதளவுக்கு வீட்டை ரணகளம் செய்கின்றனர்.
ஆரி, ரியோ, அனிதா சம்பத், அர்ச்சனா, கேப்ரில்லா, சூப்பர் சிங்கர் அஜீத், சம்யுக்தா, சனம் ஷெட்டி போன்ற போட்டியாளர்கள் எந்த அணியில் உள்ளனர் என்பது புரோமேவில் கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றி மறைத்து விடுதால் இரவில் நடக்கும் இந்த ஷோ யார், யார் என்று முகத்தை அடையாளம் காணும் போட்டியாக ரசிகர்களுக்கு மத்தியிலும் ஒரு போட்டி நடக்கும்.