கொரோனா காலத்தில் விரதம் இருக்கலாமா?
கோவிட்-19 பாதிப்பின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று புதிதாக ஏற்படுவோரின் எண்ணிக்கை தினமும் பதிவாகி வருகிறது. தினமும் கணிசமானோர் கொரோனாவால் பாதிப்புறுகின்றனர். பலர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு குணமான பின்னரும் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்நிலையில் ஆன்மீக நம்பிக்கையுள்ளோர் விரதம், உபவாசம் மற்றும் நோன்பு இருக்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுவாக, உணவைத் தவிர்ப்பது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறைக்கும் என்று உணவியல் ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்கள், நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்கள், நோய்ப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய அபாய நிலையிருப்பவராகக் கருதப்படும் முதியோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் விரதம், உபவாசம் மற்றும் நோன்பு இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்படுகிறது.
உணவைத் துறக்கும்போது நம் உடலில் இருக்கும் ஆற்றல் மூலங்கள் குளூக்கோஸிலிருந்து எஃப்எஃப்ஏ என்னும் கொழுப்பு அமிலமாக மாறுகிறது. உடலின் செயல்பாட்டுக்கான ஆற்றலுக்கு குளூக்கோஸை சார்ந்திருப்பது நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பாதிக்கும். அதன் மூலம் உடல் இன்சுலினுக்கு எதிர்வினையாற்றுவது பாதிக்கப்பட்டு ஹைப்போ இன்சுலினேமியா என்ற நிலை ஏற்படுகிறது. அப்போது கணையம் இன்னும் அதிக இன்சுலினை சுரக்கிறது. உடல் இன்சுலினின் செயல்பாட்டை உடல் தடுக்கும்போது இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு உருவாகிறது.
எவ்வகை உடல்நல பாதிப்புள்ளோர் விரதம், உபவாசம், நோன்பு இருக்கும்போது வறுத்த மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து, இயற்கை குளூக்கோஸ் உள்ள வாழைப்பழம், மாதுளை, பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்களையும் வாதுமை உள்ளிட்ட பருப்புகளையும் சாப்பிடலாம்.
முழு நாள் விரதம் இருப்பது இயற்கையான வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும் என்பதால் ஹார்மோன் சமநிலை கெட்டு வயிற்றில் அமிலத்தன்மை, உப்பிசம், குமட்டல் போன்ற உபாதைகள் ஏற்படும். ஆகவே கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் தவிர்க்க வேண்டும்.