பிரபல நடிகரின் மகளுக்கு பாலியல் மிரட்டல்.. பாடகி கடும் கண்டனம்..
பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் பாரதிராஜா, வைரமுத்து, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்ளிட்ட பலர் அப்படத்திலிருந்து விலகும்படி விஜய் சேதுபதிக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இலங்கை அரசுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவாக இருந்தார். அவர் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர் எனவே அந்த படத்தில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது.
இதையடுத்து தனது வாழ்க்கை கதையான 800 படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டார். விஜய் சேதுபதி அதை ஏற்று நன்றி வணக்கம் சொல்லி விட்டு படத்திலிருந்து விலகினார்.இந்த நிலையில் யாரோ ஒருவர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து டிவிட்டர் மெசேஜ் பகிர்ந்துள்ளார். அதைக் கண்டு விஜய் சேதுபதி ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
இந்த மிரட்டலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திரைப்பட பாடகி சின்மயி ஒரு கண்டனம் தெரிவித்து மெசேஜ் வெளியிட்டார். அதில், கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு ஆதரவா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை மாற்ற யாருமே இல்லையா?, பொதுவெளியில் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுப்பவனும் குற்றவாளி தான் என ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார்.