மூன்று வேடங்களில் அதர்வா..!

நடிகர் அதர்வா தனது அடுத்தத் திரைப்படத்தில் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அதர்வா தற்போது தான் நடித்து வரும் 'பூமராங்' திரைப்படத்தி பிஸியாக உள்ளார். இயக்குநர் கண்ணா இயக்கும் இத்திரைப்படம் சமூக நலனுக்காகப் போராடும் ஒரு இளைஞனின் கதையைச் சொல்வதாக அமைய உள்ளதாம்.

இத்திரைப்படத்தில் அதர்வாவின் மூன்று மாறுபட்ட வேடங்களுக்காக தேசிய விருது பெற்ற முன்னணி பாலிவுட் மேக் அப் கலைஞர்களை நியமித்துள்ளனர். இவர்கள் பாலிவுட் சூப்பர்ஹிட் திரைப்படங்களான பத்மாவத், மாம் உள்ளிட்டத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர்.

அதர்வா 'பூமராங்' திரைப்படத்துக்காகவே மும்பை வரை சென்று மேக் அப் டெஸ்ட் எடுத்து வருகிறார். ஒரு வேடத்துக்காகவே நடிகர் அதர்வா 12 மணி நேரம் காத்திருந்து மேக் அப் போட்டுப்பார்த்து தன்னைத் தயார்படுத்தி வருகிறாராம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>