மாடர்ன் டிரஸ்சில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா..
தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இது குடும்பங்கள் சம்மந்தமான கதை என்பதால் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.
இதில் முல்லையாக நடிகை சித்ரா நடிக்கிறார். இவரின் நடிப்புக்கு பல ரசிகர் கூட்டங்கள் உள்ளது. இவரை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி அண்ணியாக நடிக்கிறார் ஹேமா. சீரியலின் கதாபாத்திரத்தின் பெயர் மீனா ஆகும். இவரது நடிப்பு மிக க்யூட்டாக இருக்கும். இதனால் பல ரசிகர்களை தனது நடிப்பால் ஈர்த்துள்ளார். சீரியல் மற்றும் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பம் தரித்து சில நாட்களுக்கு முன்பு குழந்தையை பெற்று எடுத்தார். அவர் நடிப்பை மிகவும் நேசிப்பதால் குழந்தை பிறந்த பிறகும் வீட்டில் இருந்தபடியே நடித்து வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை அளித்து வருகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் குழந்தை பிறப்பதற்கு முன்பு மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். இதை பார்த்த மீனாவின் ரசிகார்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று விமர்சனத்தை அள்ளி தெளித்து வருகின்றனர்.