முதல்வருடன் திரை அரங்கு உரிமையாளர்கள் சந்திப்பு.. தியேட்டர் திறப்பு முடிவு தேதி அறிவிப்பு..

கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 6 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறந்த நிலையில் தமிழகத்தில் திறக்க அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்தனர்.அப்போது அவர்களிடம், அனைத்து தொழில் நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க இயலவில்லை. அக்டோபர் 28 அன்று சுகாதார குழுவின் கூட்டத்தில் இது சம்பந்தமாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.இந்த சந்திப்பின்போது தியேட்டர் சங்க நிர்வாகிகள் அபிராமி ராமநாதன், அம்பத்தூர் ராக்கி தியேட்டர் உரிமையாளர் ஹரி, சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளர் வெங்கடேஷ், வேலூர் சீனிவாசன், ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டர் உரிமையாளர் ரமேஷ், சேலம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

More News >>