கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஷமி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
டெல்லியில், கார் விபத்துக்குள்ளானதில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி நேற்று டேராடூனில் இருந்து டெல்லிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. இதில், ஷமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஷமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஷமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது ஷமியின் மீது அவரது மனைவி சரமாரி புகார்களை குவித்து வருகிறார். ஷமிக்கு பெண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் இரண்டு வருடங்களாக தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஷமியின் குடும்பத்தினர் துன்புறுத்தி வருகின்றனர் என கொல்கத்தா காவல்துறையில் ஷமி புகார் தெரிவித்தார்.
மேலும், ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், விசாரணையின் முடிவில் ஷமி சூதாட்டத்தில் ஈடுப்படவில்லை என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. ஷமி மீது அவரது மனைவி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com