தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தென் மாநிலங்கக்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மத்திய வங்கக் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இந்தக் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் திருவள்ளூர், தர்மபுரி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது.சென்னையில் இன்று காலையிலிருந்து பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.இதன் காரணமாகத் தென்னிந்தியப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், மத்திய மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

More News >>