படித்தது இன்ஜினீயர்.. வேலையோ ட்ரெக் டிரைவர்.. கேரளாவில் வைரலான இளம்பெண்!
சமீபத்தில் கேரளாவில் டிரைவர் ஒருவர் குறுகிய பாலத்தில் வண்டியை பார்க் செய்தது வைரலானதோ, அதேபோல் இப்போது இளம்பெண் ஒருவரும் தன்னுடைய டிரைவிங் ஸ்கூலால் பிரபலமாகி வருகிறார். அவர் பெயர் ஸ்ரீஷ்மா. கண்ணூர் அருகே உள்ள மைய்யில் என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபரான புருஷோத்தமன் மற்றும் பள்ளி ஆசிரியரான ஸ்ரீஜா ஆகியோரின் ஒற்றை மகள்தான் இந்த ஸ்ரீஷ்மா.
ஸ்ரீஷ்மா ஒரு பொறியியல் பட்டதாரி. படித்தது இன்ஜினீயரிங் என்றாலும் தனது 5 வயது முதலே டிரைவிங் மீது தீராத ஆர்வம் கொண்டு இருந்த ஸ்ரீஷ்மா அதற்கான பயிற்சியை சிறுவயது முதலே பெற்று வந்தவர், தனது படிப்பு முடிந்த உடன் தற்போது ஒரு ட்ரெக் டிரைவராக பணி புரிந்து வருகிறார். தனது பகுதிகளில் இருக்கும் ஊர்களுக்கு மணல், சல்லி கொண்டுசென்று வருகிறார். சாலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், மணல் மற்றும் சல்லிகளை சுமந்து கொண்டு லாரியை சாகசமாக ஸ்ரீஷ்மா ஓட்டுவதை இப்போது கேரள மக்கள் வைரலாகி வருகின்றனர். அதேபோல் ஒரு பெண் லாரி டிரைவராக வேலை செய்வது மிகவும் அரிதானது என்பதால் கிராம மக்கள் அவளை ஆச்சரியத்துடன் பார்த்து. வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு 7 லோடுகள் வரை அடித்து வரும், ஸ்ரீஷ்மா கிட்டத்தட்ட எல்லா வகையான பைக்குகளையும் கார்களையும் ஓட்ட முடியும், மேலும் பேருந்துகளை ஓட்டவும் தயாராக இருக்கிறார். அனைத்து வகையான வாகனங்களையும் ஓட்டுவதற்கான உரிமத்தையும் பெற்றுள்ளார். இப்போது எர்த் மூவர்ஸை இயக்க பயிற்சி பெற்று வருகிறார். ஒருமுறை சல்லி ஏற்றிக்கொண்டு செல்லும்போது, ஒரு சதுப்பு நிலத்தில் லாரி சிக்கிக்கொண்டுள்ளது. ஆனால் ஸ்ரீஷ்மா உள்ளூர்வாசிகளின் உதவியுடன் லாரியை லாவகமாக வெளியே எடுத்து வந்துள்ளார். இதனை உள்ளூர் வாசிகள் பெருமையுடன் சொல்லி, ஸ்ரீஷ்மாவை பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே, தனது படிப்புக்கேத்த ஒரு சிறந்த வேலை கிடைக்கும் வரை இந்த வேலையைத் தொடர முடிவு செய்துள்ளார் ஸ்ரீஷ்மா.