குவா குவா சத்தம்.. மீண்டும் அப்பாவானார் நம் கடைகுட்டிச் சிங்கம் ஹீரோ கார்த்திக் – மகிழ்ச்சியில் சிவகுமார் குடும்பம்..
நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மனைவிக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார் நடிகர் கார்த்திக். இவர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரனில் அறிமுகமாகி கடைகுட்டிச் சிங்கம், தோழா, ஆயிரத்தில் ஒருவன் போன்ற வெற்றி படங்களில் நடித்து மக்களை ஈர்த்துள்ளார். இவருக்கு 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.இதை அடுத்து இருவரும் பெண் பிள்ளையை பெற்று எடுத்து உமையாள் என்று பெயரிட்டு மகிழ்ச்சியாக வளர்த்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு கார்த்தியின் மனைவி இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார் என்று மீடியா முழுவதும் தகவலை வெளியிட்டது. இதை அடுத்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை நடிகர் கார்த்திக்கு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கார்த்திக் தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆண்டவன் அருளால் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளார்..