நன்றாக சிரித்து பேசிய பெண் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை.. பொள்ளாச்சியில் நடந்த துயரம்..
பொள்ளாச்சியில் திருமணம் ஆகி 3 மாதமான புதுப்பெண் திடீரென மின் விசிறியில் தூக்கு மாட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள சிறிய கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேஷ். இவர் தனியார் கல்லூரியில் பயிலும் ஸ்டெல்லா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்து குடும்ப நடத்தி வருகின்றனர். சில நாளுக்கு முன் ஸ்டெல்லா அவர்கள் மிகுந்த தலைவலியில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக ஸ்டெல்லா சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். நேற்று ஸ்டெல்லா கணவனிடம் சிரித்து பேசிவிட்டு குளிக்க குளியலறைக்கு சென்றுள்ளார். பிறகு படுக்கை அறைக்கு சென்று தாப்பாள் போட்ட ஸ்டெல்லா ஒரு மணி நேரம் கடந்தும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகப்பட்ட வெங்கடேஷ் படுக்கை அறையின் கதவை தட்டியுள்ளார். எவ்வளவு நேரம் கதவு தட்டியும் ஸ்டெல்லா கதவை திறக்கவில்லை என்பதால் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்பொழுது ஸ்டெல்லா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு வெங்கடேஷ் போலீஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவலர்கள் ஸ்டெல்லாவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டெல்லா செய்து கொண்டது கொலையா?தற்கொலையா? என்று போலீஸ் தீவீரமாக விசாரித்து வருகின்றனர்..