ரஷ்யாவில் பயங்கரம்: ஷாப்பில் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலி
ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தில் பிரபல ஷாப்பிங் மாலில் எப்போது கூட்டம் நிரம்பி இருக்கும். நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், பொது மக்கள் ஆர்வமுடன் ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்த நேரத்தில் நேற்று திடீரென ஒரு தளத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதைக்கண்ட மக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்து மக்களை வெளியேற்றி தீயை அணைக்கும் பணியை தொடங்கினர்.
அதற்குள், தீ மளமளவென பிற தளங்களிலும் பரவியது. இதன் பின்னர், 12 மணி நேரம் போராடி வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகிய நிலையில் சடலத்துடன் மீட்கப்பட்டனர். மேலும், பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களில் 32 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால், இந்த துயர சம்பவத்தில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com