கொரோனா வைரஸ் மூளையையும் பாதிக்குமாம்!! ஆராய்ச்சியில் வெளியான உண்மை தகவல்.
சீனாவில் மெதுவாக தொடங்கிய கொரோனா வைரஸ் ஒரே நாள் இரவில் உலகம் முழுவதும் பரவியது. இதனால் கோடிக்கணக்கில் மக்கள் மாய்ந்து வருகிறார்கள். வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே போகிறது. இதனை கட்டுப்படுத்த சரியான வழி தெரியாமல் ஆய்வாளர்கள் திகைத்து வருகின்றனர். கொரோனாவை தடுக்க பல ஆய்வர்கள் ஒன்று சேர்ந்து இரவும் பகலும் அயராது பாடுபட்டு மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். கொரோனா முதலில் உடம்பில் இருக்கும் சுவாச மணடலத்தை தான் பாதிக்கும் என்பது யாவரும் அறிந்தது. அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டால் சுவாசிக்க கஷ்டப்படுவார்கள். ஆனால் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த ஆய்வில் கொரோனா மூளையையும் பாதிக்கும் என்று ஆதார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு மூளைக்கு செல்கிறது:-முதலில் வைரஸ் நாம் சுவாசிக்கும் மூக்கு வழியாக மூளையை சென்றடைகிறது. அதுபோல வெளிப்புறம் இருக்கும் நரம்புகளின் பாதைகளின் வழியாக வைரஸ் மூளையை தாக்குகிறது. கொரோனா மூளையை தாக்கினால் தலைவலி, தலைசுற்றுதல், சுவை மற்றும் வாசனை இழப்பு, சுயநினைவு குறைதல், பக்கவாதம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
கொரோனாவின் அறிகுறிகள்:-கொரோனா மூளையை பாதித்தால் முதலில் வரக்கூடிய அறிகுறி தலை வலி ஆகும். தலைவலியுடன் சேர்த்து காய்ச்சல், இருமல், சளி, தலைசுற்றுதல் ஆகியவை வரும். தலைவலி வருவது மூல காய்ச்சல் வருவதற்கு முதல் படியாகும். இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். அதனால் சாதாரண தலை வலி வந்தாலே மருத்துவரிடம் செல்வது நல்லது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஆய்வில் 60-70% மக்களுக்கு நுகரும் பொழுது வாசனை எதுவும் தெரியாமல் மற்றும் சுவை திறன் குறைந்து காணப்படும் என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஆகையால் பாதுக்காப்பாக இருப்பது மிகவும் அவசியம்..
மூளையில் கொரோனா பாதித்தவர்கள் எப்பொழுதும் குழப்பமாய் காணப்படுவார்கள். அது மட்டும் இல்லாமல் மறதி, கவனம் செலுத்துவதில் தயக்கம் ஆகியவையம் முதற்கட்ட அறிகுறிகள் ஆகும்.
கொரோனா வயதானவர்களை தாக்கினால் அவர்களுக்கு மிக எளிதாக பக்கவாதம் ஏற்படும். படிப்படியாக வெள்ளையணுக்கள் குறைய ஆரம்பிக்கும். அப்படி குறையும் பொழுது மாரடைப்பும் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். ஆதலால் கொரோனாவால் பாதித்தாலும் பயப்படாமல் தைரியத்துடன் எதிர் கொண்டால் கொரோனாவை விரைவாக எதிர்கொண்டு விடலாம்..