ஐபிஎல்லில் தலைகாட்டும் அந்த கண்ணழகி யார் தெரியுமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது இடையிடையே பல்வேறு முகபாவனைகளை காண்பிக்கும் அந்த காந்த கண்ணழகி யாரென்பதை கண்டுபிடிச்சாச்சு. பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது கேமரா கண்கள் இடையிடையே வித்தியாசமான காட்சிகளையோ, ரசிகர்களையோ கண்டுபிடித்து ஒளிபரப்புவது வழக்கம். ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்கள் யாரும் இல்லாததால் கேமராமேன்களின் வேலை குறைந்து விட்டது. ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இல்லாததால் தற்போது கேமராமேன்கள் ஸ்டேடியத்திற்கு வெளியே சாலையில் செல்பவர்களைத் தான் குறி வைக்கின்றனர்.

ஒவ்வொரு அணியின் சார்பிலும், ஸ்பான்சர்கள் சார்பிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் கடுமையான பரிசோதனைகளுக்குப் பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்த சில போட்டிகளில் ஒரு காந்த கண்ணழகியை கேமராமேன்கள் எப்படியோ தேடிக் கண்டுபிடித்து விட்டனர். போட்டியின் போது இடையிடையே அவரது முக பாவனைகளையும் காண்பித்தனர். சமீபத்தில் பஞ்சாப், மும்பை அணிகளுக்கிடையே நடந்த போட்டியை பார்க்க அந்த கண்ணழகியும் வந்திருந்தார். இரண்டாவது சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றபோது அவரது முகபாவனைகள் அடிக்கடி டிவியில் மின்னி மறைந்தன. இதைப் பார்த்த ரசிகர்கள் யார் அவர் என்று கேள்வி எழுப்பினர். ஏதாவது ஒரு வீரரின் கேர்ள் பிரண்டாக இருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் யாரென கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இறுதியில் அவரை கண்டுபிடித்தும் விட்டனர்.

பஞ்சாப்பை சேர்ந்த அவரது பெயர் ரியானா லால்வானி. சமூக இணையதளங்களில் அவர் கொடுத்துள்ள விவரத்தின்படி துபாயில் உள்ள ஜுமைரா கல்லூரியில் படித்தார். இப்போது இங்கிலாந்தின் கோவன்ட்ரியில் உள்ள வார்விக் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். சமீபத்தில் தான் இவர் தனது 23 வது பிறந்தநாளை கொண்டாடினார். அடுத்த போட்டிக்கு இவர் வருவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More News >>