10 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை... அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியர் விவகாரத்தில் மர்மம்!
அமெரிக்காவின் சியாட்டிலின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் 33 வயதான சாம் துபல். இந்தியாவைச் சேர்ந்த இவர் கடந்த 9ம் தேதி மோவிச் ஏரி டிரெயில்ஹெட்டில் இருந்து மதர் மவுண்டன் லூப் பகுதிக்கு சென்றிருக்கிறார். அக்டோபர் 12 ஆம் தேதி அந்த இடத்தில் வெளியேறிய அவர் எங்கு சென்றார் என்பதற்கான விவரங்கள் தெரியவில்லை. அவர் காணாமல் போயிருக்கலாம் எனக் கருதி அவரை தேடி வருகின்றனர் போலீஸார்.
அவரைத் தேட வாஷிங்டன் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் பல குழுக்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதேநேரம் துபலின் காரை தேடுதல் குழு கண்டுபிடித்துள்ளதாக அவரின் சகோதரி வீணா தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீணா கூறுகையில், ``என் சகோதரர் 9-ம் தேதி இரவு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இப்ஸூட் க்ரீக் மற்றும் சியாட்டில் பூங்காவில் தங்கியிருந்தார். மறுநாளே வீட்டிற்கு திரும்ப இருந்தார். அந்த இடத்தில் யாராவது நடைபயிற்சி மேற்கொண்டால் அல்லது அந்த இடத்தில் முகாமிட்டு இருந்தால் தயவுசெய்து கவனித்து சகோதரர் தொடர்பான தகவலை அனுப்புங்கள்" எனக் கூறியுள்ளார்.