5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

தமிழ்நாடு ஊராட்சி வளர்ச்சி துறையில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை மற்றும் நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி: கிராம உதவியாளர் (Village Assistant)

மொத்த காலியிடங்கள்: 17

காலிப்பணியிடம் உள்ள கிராமம்: குஜிலியம்பாறை வட்டம் - 09: கருங்கல், வடுகம்பாடி, திருக்கூர்ணம், குளத்துப்பட்டி, கூம்பூர் கிராமம், சின்னுலுப்பை, தோளிப்பட்டி, கரிக்காலி, ஆர்.புதுக்கோட்டை கிராமம்.

நிலக்கோட்டை வட்டம் - 08: மட்டப்பாறை, சித்தர்கள்நத்தம், குல்லலக்குண்டு, விருவீடு, மல்லணம்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, குன்னுவாரன்கோட்டை, கணவாய்பட்டி

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குஜிலியம்பாறை, நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

தகுதி: 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான நபர்கள் தங்கள் பெயர், கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, ஜாதி ஆகிய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம் தயார் செய்து மேற்கொண்ட கொண்ட ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் விண்ணப்பத்தாரர்கள் தங்களது பகுதியைச் சேர்ந்த வட்டாட்சியருக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2020 மாலை 5 மணிக்குள் சென்று சேர வேண்டும்.

முழுமையான விவரங்கள் அறிய

https://dindigul.nic.in/nilakkottai-village-assistant-job/

https://dindigul.nic.in/kujiliamparai-village-assistant-job என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More News >>