ஆரியின் கோபம் ,சந்திரமுகியாக மாறிய அனிதா ,சுரேஷின் கதறல் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 17
ஓபன் தி டாஸ்மாக் பாட்டை காலங்கார்த்தால போடறாங்க. இதுக்கு எப்படி நாம டான்ஸ் ஆடறதுனு பொண்ணுங்களும், ஆஹா இந்த பாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு டான்ஸ் ஆடி நம்ம இமேஜை கெடுத்துக்க வேணாம்னு பசங்களும் சைலண்ட் டான்ஸ்ஒன்னை கண்டுபிடிச்சு ஆடிட்டு இருந்தாங்க.நாடா? காடா? லக்சரி பட்ஜெட் டாஸ்க்ல ரெண்டு டீமும் ட்ரெஸ்ஸை மாத்திட்டாங்க. மாயாபுரி டீம் சொர்க்க புரியாவும், சொர்க்கபுரி டீம் மாய புரியாகவும் மாறிட்டாங்க.
அரக்கனா இருந்த போது ஏகப்பட்ட மாடுலேஷன்ல பேசின சுரேஷ் அரசனா மாறினதுக்கு அப்புறம் அழுகாச்சி மோட்ல ஒப்பாரி பாட்டு பாடிட்டு இருந்தாரு. ஒருவேளை பின்னாடி நடக்க போறது முன்னாடியே தெரிஞ்சுருச்சு போல.. அர்ச்சனா ராஜமாதாவாக சார்ஜ் எடுத்துகிட்டாங்க. ஆரியும், அர்ச்சனாவும் ஏதோ ப்ளான் பண்ணிட்டு இருந்தாங்க.
அந்த பக்கம் ரம்யா மட்டும் தான் ஐடியா கொடுத்திட்டு இருந்தாங்க. சோம், பாலாவும் தான் கொஞ்சம் ஆக்டிவா இருந்தா மாதிரி தெரிஞ்சுது.முதல் ஆளா ராஜமாதா அர்ச்சனா வந்தாங்க. அரக்கர் கூட்டம் என்னன்னவோ செஞ்சும் ஒன்னும் வேலைக்காகலை. அர்ச்சனா ஜெயிச்சுட்டாங்க.
அடுத்ததா ஆரி வந்தாரு. இந்த தடவை கொஞ்சம் உஷாரான அரக்கர் டீம், ஆரஞ்சு பழ தோலு, ஸ்ப்ரேனு எடுத்து வச்சுருந்தாங்க. ஏகப்பட்ட வித்தைகளை யூஸ் பண்ணியும் ஆரி ஸ்ட்ராங்கா தான் இருந்தார். ஆரஞ்சு பழத்தோலை எதிர்பார்க்காததால தோத்து போய்ட்டார். அதுக்கப்புறம் கேமரா கிட்ட போய், பாலா என் தோள்ல இடிச்சான், சோம் காதுல இடிச்சான், ரியோ கையை தட்டினான்னு புகார் பட்டியல் வாசிச்சாரு. இந்த மாதிரி கேம் விளையாடறதுக்கு நீங்க வேற ஏதாவது செய்யலாம்னு ப்ளோவுல சாபம் விட்டாரு. பாலாஜிக்கும் ஆரிக்கும் நேரடியா முட்டிகிச்சு. பாலாஜி எப்பவும் உண்மையை மட்டும் பேசி பார்மாகிருக்காரு போல. பாலா தான் இடிச்சதை ஒத்துகிட்டாலும், அந்த இடத்துல அவுட்டானதை நாங்க க்ளைம் செய்யலனு வாதாடினாரு. இருந்தும் ஆரி விடாம பாலாவை சீண்டிட்டே இருந்தார். ஒரு கட்டத்துல இந்த பிரச்சினையை வச்சு என்னோட நேர்மையை சந்தேகப்பட வைக்காதீங்கனு ஆரிகிட்ட பர்சனலா கோபப்பட்டாரு. டாஸ்க் முடிஞ்சாலும் இந்த பிரச்சினை தொடரும்னு நினைக்கிறேன்.
அவ்வளவு நேரம் சும்மா இருந்த பிக்பாஸ், ஆரி அவுட்டுனு அறிவிப்பு கொடுத்தார். அப்படின்னா அரக்கர் டீம் செயல்படுத்தின முறைகளில் எந்த விதிமீறலும் இல்லைனு தான் அர்த்தம். ஆனா ஆரி எதையும் ஒத்துக்கறா மாதிரி இல்லை.
அடுத்து ரமேஷ் வந்தாரு. அரக்கர் டீம் எடுத்து வச்சுருந்த ஸ்ப்ரே இன்னும் சில பொருட்களை அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு போனாங்க சொர்க்கபுரி டீம். ஆனாலும் அரக்கர் டீம் அசரவே இல்லை.
அந்த பக்கம் சுரேஷ் கன்னாபின்னானு திட்டிட்டு இருந்தார். அப்பப்போ கேமரா முன்னாடி நின்னு சோலோ பர்பாமன்ஸ் பண்ணிட்டு இருந்தார்.
அடுத்து ஆஜித் வந்து அவுட்டாகிட்டான். அப்பவே பிரச்சினை வர மாதிரி தான் இருந்தது. அரக்கர் டீம் செயல்படுத்தின முறைகளைத் தொடர்ந்து அப்ஜெக்ட் செஞ்சுட்டு இருந்தாங்க அர்ச்சனா.ரொம்ப நேரம் இருந்தாலும் ஆஜித் மூவ் பண்ணிட்டாருனு அவுட்னு சொல்லிட்டாரு பிக்பாஸ்.ஒரு பக்கம் சுரேஷ் சனமை டார்கெட் செஞ்சு திட்டிட்டு இருந்தார். நேத்துல இருந்தே இது நடந்துட்டு இருக்கு.
பாலாவும் சோமும் வீட்டுக்குள்ள ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருந்தாங்க. விளையாட்டு வினையாகும்னு சொல்றா மாதிரி மிளகாப்பொடி டப்பாவை தூக்கிட்டு போகப் பார்க்க அதைத் தூக்கிப் போடும் போது பாட்டில் உடைஞ்சு மிளகாப்பொடி கீழ கொட்டிருச்சு. நல்ல வேளையா யார் மேலேயும் விழல. சோம் தான் தூக்கி வீசினதால, அவரே க்ளீன் பண்ணிட்டு இருக்கும் போது, அங்க வந்த அனிதா, நான் சொல்லிட்டே இருக்கேன், கேக்கவே மாட்டேங்கறியேனு சோம் கிட்ட வம்புக்கு போனாங்க. நீ சொல்றதை எப்பவும் கேட்டுட்டு இருக்க முடியாதுனு சோம் எகிற, சந்திரமுகி மோடுக்கு போனாங்க அனிதா.
சோமை தன்னோட அடிமை மாதிரி நினைச்சுக்கறாங்க அனிதா. அவனும் எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருக்கான் போலருக்கு. நான் பார்த்துக்கறேன்னு அர்ச்சனா சொல்லிட்டே இருந்தும் சோம் கேக்கவே இல்லை. அப்புறம் கடுமையா சொன்னதுக்கு அப்புறம் தான் வெளிய போனான் சோம்.
அடுத்து கேப்பி வந்த போது தான் அந்த சம்பவம் நடந்தது. ஏற்கனவே நிஷா, ரம்யாவை துடைப்பத்துல, செங்கோல் வச்சு அடிச்சுட்டு இருந்தாரு சுரேஷ். அதை அப்பவே தொடர்ந்து வேணாம்னு சொல்லிட்டு இருந்தாங்க அர்ச்சனா. ஆனாலும் சுரேஷ் கேக்கவே இல்லை. கேப்பி வெளிய உக்காந்துட்டு இருக்கும் போது, கண்ணாடி வழியா பார்க்க கூடாதுனு துணியை வச்சு மறைச்சு நிக்கும் போது, மறுபடியும் சுரேஷ் அடிக்க முயற்சி செய்ய அது சனம் மேல விழுந்துருச்சு.
சனம் பயங்கர டென்சனாகி கத்தவும் தான் எல்லாருக்கும் அதோட சீரியஸ்னெஸ் தெரிஞ்சுது. சுரேஷும் கொஞ்சம் ஜெர்க் ஆனாரு. அது ஒரு சின்ன அடி தான். இருந்தாலும் சனம் அந்தளவு ரியாக்ட் செய்ய காரணம், அடிச்சது சுரேஷ்ங்கறது முதல் காரணம். அதில்லாமல் நேத்துல இருந்து சுரேஷ் செஞ்சுட்டு இருந்த பர்சனல் அட்டாக். இது எல்லாம் சேர்ந்து சனமை ஹைப்பர் டென்சன் மோடுக்கு மாத்திருச்சு. அதே மாதிரி ஒரு பிரச்சனைனா அந்த இடத்துல இருந்து எஸ்கேப் ஆகற சுரேஷோட இயல்பும் சேர்ந்து இன்னும் டென்சன் ஆகி, வாடா போடானு கத்த ஆரம்பிச்சுட்டாங்க சனம். சுரேஷும் வழக்கம் போல அந்த இடத்துல இல்லாம பெட்ரூம்ல இருந்து விளக்கம் கொடுத்துட்டு இருந்தார்.
நிஷா, ரம்யாவை ரொம்ப நேரமா அடிச்சுட்டு இருந்தேன். சனம் அங்க இருந்தது தெரியாது. தெரிஞ்சா அடிச்சுருக்க மாட்டேன்னு விளக்கம் கொடுத்துட்டு இருந்தாரு. யாரை அடிச்சாலும் தப்பு தான்னு எடுத்து சொன்னாங்க அர்ச்சனா. உள்ள வந்த பாலா, மூளை இருக்கானு திட்டிட்டு போனான். அதென்னவோ பாலா திட்டும் போது பேசாம வாங்கிக்கறாரு சுரேஷ்.
சனம் கத்த ஆரம்பிச்ச போதே சுரேஷை கூப்பிட்டு சாரி கேக்க சொன்னாங்க அர்ச்சனா. ஆனா சுரேஷ் வெளிய வரவே இல்லை. ஒவ்வொரு கேமராவா போய் விளக்கம் கொடுத்தாரு. ஒவ்வொரு தடவையும் சனமை, அது இதுனு குறிப்பிட்டு பேசினது மோசமான முன்னுதாரணம். சனம் கூட வந்த பிரச்சினையை மனசுல வச்சு தெரிஞ்சே சாத்திருப்பாரோ எல்லாருக்குமே தோணிருக்கும்.
சுரேஷை வெளிய கூட்டிட்டு வந்த அர்ச்சனா மறுபடியும் எல்லார்கிட்டேயும் சாரி கேக்க சொன்னாங்க. அப்பவும் தூரத்துல இருந்து சாரி சொன்னாரு சுரேஷ். ஆனா அர்ச்சனா விடவே இல்ல. தொடர்ந்து வற்புறுத்தி எல்லர்கிட்டேயும் சாரி கேக்க வச்சாங்க.
மறுபடியும் கேமராகிட்ட பேசின சுரேஷ், தன்னை கன்பெஷன் ரூமுக்கு கூப்பிடுங்கனு பிக்பாஸ் கிட்ட கோரிக்கை வச்சாரு. கொஞ்ச நேரம் கழிச்சு பிக்பாஸ் கிட்ட இருந்து அழைப்பும் வந்தது. "நான் தப்பு பண்ணிட்டேன், என்னை எவிக்ட் பண்ணிடுங்க" னு அழுதாரு சுரேஷ். அதை எத்தனை பேர் நம்பினாங்கனு தெரியல. தெரியாம நடந்த தவறுக்கு, சம்பந்தபட்டவங்க கிட்ட பேசி சரி பண்ணுங்கனு சொல்லி அனுப்பி வச்சாரு பிக்பாஸ். அப்பவும் தன்னை எல்லாரும் கார்னர் செய்யறதாகவும், தன்னை பத்தி தப்பா பேசறதாகவும் சொல்ல மறக்கலை சுரேஷ்.
நேற்றைய நாள் சுரேஷ்-சனம் சம்பவத்துக்கு அப்புறம் சுரேஷ் மட்டுமே போகஸ்ல இருந்தார். சனம் என்ன செஞ்சாங்கனு ஒன்னுமே தெரியல. சனம் இந்த தடவை நாமினேஷன்ல இல்லைங்கறதால, சுரேஷை மட்டும் காமிச்சாங்களானு தெரியல.
இன்னிக்கு என்ன நடக்குதுனு பார்ப்போம்.