கொரோனாவில் குணம் ஆன நடிகர் ஷூட்டிங்கில் பங்கேற்பு.. வீடியோ வெளியீடு
கொரோனா வைரஸ் தாக்கி ஆயுர்வேத வைத்தியம் எடுத்துக்கொண்டு குணம் ஆனவர் நடிகர் விஷால். 3 மாதம் கழித்து அவர் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார்.நடிகர் விஷால், ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது. இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார் . இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9-வது தயாரிப்பாகும்.அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் 4-வது திரைப்படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பில் விஷால் கலந்து கொண்டார். அதற்கான முதல் ஷாட் வீடியோவை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஐதராபாத்தில் ஷூட்டிங் முடிந்த பிறகு சென்னையில் 16 நாட்களும், ஊட்டியில் 12 நாட்களும், 32 நாட்கள் மலேசியாவிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறப் போகிறது. மலேசியாவில் நடைபெறும் 32 நாட்கள் படப்பிடிப்பு முழுவதிலும் ஆர்யா கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்த லாக்டவுனில் மலேசியாவில் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு அனுமதியில்லை என்று மலேசிய அரசு சொல்லியிருக்கிறது. இப்போதைக்கு இந்தப் படத்தின் சென்னை, ஊட்டி ஷெட்யூல்கள் முடியவே அடுத்தாண்டு ஜனவரி ஆகிவிடும் என்பதால் அதற்குப் பிறகு மலேசியாவுக்கு செல்வதில் பிரச்சனையிருக்காது என்று தயாரிப்பாளர் தரப்பு எண்ணுகிறது.