நயன்தாராவுடன் காதல் தொடங்கிய நாள்... பிரபல இயக்குனர் சூப்பர் அறிவிப்பு..
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகக் கடந்த 2 வருடமாகத் தகவல்கள் வந்த வண்ணமிருந்தாலும் அது நிஜமாகவில்லை. ஆனால் இருவரும் காதலையும் தாண்டி வாழ்வில் இணைந்த தம்பதிகள் போலவே வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜோடியாகப் பறந்து சென்று ஜாலியை அனுபவித்து வந்த நயந்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி கொரோனா ஊரடங்கில் 5 மாதம் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தது.
கொரோனா ஊரடங்கு எப்போது முடியும் மீண்டும் எப்போது ஜாலியாக ஊர் சுற்றுவது என்று தனது காதல் ஏக்கத்தை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.காதலனின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய நயன்தாரா கடந்த 2 மாதத்துக்கு முன் தனி விமானம் எடுத்துக்கொண்டு காதலனுடன் கோவா சென்று அங்கு பிறந்தநாள் கொண்டாடி விட்டுத் திரும்பி வந்தார். காதலனுக்காகத் தனி விமானம் வாடைக்கு எடுத்த காதலி நயன்தாராவாகத்தான் இருப்பார். காதல் களியாட்டங்கள் முடிந்து மீண்டும் வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளது இந்த ஜோடி.
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான்படம் வெளியாகி 5 வருடங்கள் முடிகிறது. இந்த படத்தில் நடித்த போது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இயக்குனர் விக்னேஷ் சிவன் 5 வருட நிறைவில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அடுத்துத் தான் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். ஆனால் அதன்பிறகு அதுபற்றிய வேறு தகவல் எதுவும் வெளியாகவில்லை. தற்போது நெற்றிக் கண் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி நானும் ரவுடி தான் வெளிவந்து இன்றுடன் 5 வருடங்கள் முடிவடைந்து இருக்கின்றது. அளவில்லா அன்பு மற்றும் பேராதரவால் நானும் ரவுடி தான் பல இதயங்களை வென்றெடுத்து உள்ளது. எங்கள் வாழ்வை மாற்றியது. 5 வருடங்களுக்குப் பிறகு தற்போது இதே நாளில் எங்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான நெற்றிக்கண் தயாராக உள்ளது என்றும் எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்களின் அதே அளவிலான அன்பையும் ஆதரவையும் இந்த திரைப் படத்திற்கும் தருவீர்கள் என நம்புகிறோம். ஆசீர்வாதம் அளித்த கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி எனத் தெரிவித்திருக்கிறார்.