இனி டிவியை ஈசியாக சுருட்டலாம்...
சுருட்டி வைக்கும் வசதி கொண்ட டிவியை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.தென்கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான எல்ஜி நிறுவனம், சுருட்டி வைக்கும் வசதியுடன் கூடிய ஓஎல்இடி டிவியை உலகில் முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது.65 அங்குல கொண்ட இந்த டிவி, சிறிய பெட்டி ஒன்றை அடிதளத்தில் கொண்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப ஒளி, படங்களின் அடர்த்தி உள்ளிட்ட அளவுகளைத் தானாக மாற்றக்கூடிய வகையில் இந்த டிவி உருவாக்கப்பட்டுள்ளது.
ஓஎல்இடி ரக திரையை, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்த பெட்டிக்குள் சுருட்டி வைக்கும் வகையிலும் வெளியே எடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர நவீன கருவிகளில் உள்ள அத்தனை வசதிகளும் இந்த சுருட்டல் டிவியில் அடக்கம்.
திரையின் அளவை பொறுத்து 3 வித சேவைகளை வழங்கும் இந்த டிவி, தென்கொரியாவில் முதல் முதலாக விற்பனைக்கு வந்துள்ளது.வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொருத்து மற்ற நாடுகளுக்கு இதை ஏற்றுமதி செய்ய எல்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.அதெல்லாம் சரி.. ரேட்டு எவ்வளவு என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?அதிகமில்லை ஜென்டில்மேன்.
ஜஸ்ட் 64 லட்சம் ரூபாய் தான்...