இந்து பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு... திருமாவளவனை கடுமையாக விமர்சிக்கும் பாஜக!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சர்ச்சை பேச்சு குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சனாதன தர்மம் குறித்து பேசியவர், ``சனாதன கொள்கைகளில், பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்டப்பெண்களுக்கும் பொறுந்தும். எல்லாப்பெண்களுக்கும் தீட்டு உண்டு" என்று பேசியிருக்கிறார். இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையாகி வருகிறது.
குறிப்பாக பாஜக திருமாவளவனை கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருமாவளவன் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் திருமாவளவனை மிக மோசமாக, டுவிட்டரில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். ஏற்கனவே, ``உயர் சாதி ஆண்மையற்றவர்கள். அதனால் அந்த சாதியை சேர்ந்த பெண்கள் கீழ் சாதியை சேர்ந்த பையன்களை காதலிக்கின்றனர்" என்று அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கான விடை கிடைக்கும் முன் இப்படி அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.