பிரபல நடிகைக்கு மூன்றாவது கொரோனா டெஸ்டில் நெகடிவ்...
நடிகை குஷ்பு மூன்றாவது முறையாக எடுத்துக்கொண்ட கொரோனா டெஸ்டில் தனக்கு நெகடிவ் வந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் குஷ்பு. இவர் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அரசியலிலும் மிகுந்த ஈடுப்பாட்டுடன் செய்து வருகிறார். நீண்ட காலமாக பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு பாஜக கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். இதற்கு இடையில் காங்கிரஸ் கட்சியை பற்றி அவதூராக பேசி சர்ச்சையில் மாட்டி கொண்டார். பிறகு மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மன்னிப்பும் கேட்டார். பாஜகவில் இணைந்ததால் முக்கிய தலைவர்களை சமீப காலமாக சந்தித்து வருகிறார். இதனால் மூன்றாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்து அதில் நெகடிவ் வந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.