சுவையான முட்டை மஷ்ரூம் குழம்பு ரெசிபி..
சுவையான முட்டை மஷ்ரூம் குழம்பு எப்படி செய்றதுன்னு பார்ப்போமா..
தேவையான பொருட்கள் :
வேகவைத்த மஷ்ரூம் 300 கிராம்வேகவைத்த முட்டை-5எண்ணெய்-தேவையான அளவுவெங்காயம்-1மஞ்சள்தூள்-1/2 தேக்கரண்டிமிளகுதூள்-1/2 தேக்கரண்டிமிளகாய்தூய்-1/2 தேக்கரண்டிதுருவிய தேங்காய்-2தேக்கரண்டிமிளகாய்-3பட்டை, இலவங்கம், கிராம்பு-3இஞ்சி, பூண்டு விழுது-1ஸ்பூன்தனியா-1டீஸ்பூன்சீரகம்-1/2டீஸ்பூன்உப்பு-தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், தேங்காய், தனியா, சீரகம், மிளகாய், இவற்றை வறுத்து அரைத்துக்கவும். கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டை போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மஷ்ருமை போட்டு சில நிமிடம் கழித்து மஞ்சள் பொடி, மிளகு பொடி, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை போடவும். அதையும் நன்கு வதக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதனுடன் வேகவைத்த முட்டையை போட்டு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com