கம..கம.. மலர்களின் விலை மள..மளவென உயர்வு

ஆயுத பூஜையையொட்டி தென்மாவட்டங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை யில் உள்ள மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தைகளில் ஒன்று கேரள மாநிலத்திற்கு இங்கிருந்துதான் தினமும் டன் கணக்கில் பல்வேறு விதமான பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது.தற்போது ஆயுத பூஜையையொட்டி மலர் சந்தையில் பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது .

கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளி பூ தற்போது கிலோ ஒன்றுக்கு 320 ரூபாய்க்கும் ரோஜா 100 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மஞ்சள் சிவந்தி 100 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெள்ளை சிவந்தி 170 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கும் சம்பங்கி 150 ரூபாயில் இருந்து 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நந்தியாவட்டம் என்ற மலர் ரகம் கடுமையாக விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் எண்பது ரூபாய்க்கு விற்ற நந்தியாவட்டம் இன்று 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கொழுந்து மலர் 100 ரூபாயில் இருந்து 170 ரூபாய்க்கும் துளசி 25 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கோழிக்கொண்டை பூ 50 ரூபாயில் இருந்து 80 ரூபாய்க்கும் வாடாமல்லி 40 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மலர் தற்போது 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இப்படி அனைத்து ரக பூக்களின் விலையும் தொடர்ந்து மூன்று மடங்கு மேல் விலை அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வால் பூக்கள் பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News >>