சஸ்பென்ஸ் திரில்லர்- நயன்தாராவின் நெற்றிக்கண் பர்ஸ்ட் லுக் வெளியீடு.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக போற்றப்படுபவர் நயன்தாரா. இவர் எந்த படத்தில் நடித்தாலும் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு உண்டு. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி நேற்றோட 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதில் நடித்த நயன்தாரா மற்றும் திரைப்படத்தை பற்றியும் நெகிழ்ச்சி ஊட்டும் விதமாக தனது எண்ணங்களை பகிர்ந்து இருந்தார் விக்னேஷ் சிவன். இந்த படம் நடிக்கும் பொழுது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே அழகிய காதல் மலர்ந்தது. இந்நிலையில் நெற்றிக்கண் படத்தையும் விக்னேஷ் சிவன் தான் இயக்குகிறார். அவரது காதலியான நயன்தாரா அவர்கள் நடிகையாக நடிக்கிறார்.நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நயன்தாரா காது கேட்காத பெண்ணாக நடித்து இருந்தார்.
சில காலங்களில் வெளியாக போகும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. இப்படத்தின் முக்கியமான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் விரைவில் வெளியாக கூடும் என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இந்த போஸ்டரில் நயன் பயம் கலந்த முக பாவனையுடன் நெற்றியில் இருந்து இரத்தம் சொட்ட சொட்ட கையில் ஒரு கம்பியுடன் யாரையோ தாக்க நிற்பது போல் உள்ளது. கண்ணாடியில் எதோ ஒரு உருவம் நயனை நோக்கி வருகிறது. போஸ்டரே பயங்கர சஸ்பென்ஸ்ஸாக உள்ளது படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர். இப்படம் கொரியன் படமான "பிளைண்ட்" படத்தின் ரீமேக் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.