நடிகைகளை சிறையில் சந்தித்தது யார்? சிறை அதிகாரி தந்த தகவல்..

பெங்களூரூவில் 2 மாதத்துக்கு முன் டிவி நடிகை இருவரும் இன்னும் சிலரைப் போதை மருத்து தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் கன்னட திரையுலகினர் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றது. அவர்கள் வீடுகளில் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் சோதனையிட்டு சில தஸ்தாவேஜ்களை கைப்பற்றினார்கள்.

பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். செப்டம்பர் 4ம் தேதி ராகினி திவேதியும் செப்டம்பர் 8ம் தேதி சஞ்சனா கல்ராணியும் பெங்களூரூ பார்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே அறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.

ராகினி புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் இரவெல்லாம் நீண்ட நேரம் விளக்கு எரியவிட்டுப் படித்து வந்தார். ஆனால் விளக்கை அணைக்கச் சொல்லி சஞ்சனா அவரிடம் சண்டையிட்டார். இந்த மோதல் தொடர்ந்த வண்ணமிருந்ததால் இருவரும் வெவ்வேறு பெண் கைதிகள் உள்ள அறைகளில் பிரித்து அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் இருவரும் கோர்ட்டில் ஜாமீன் கோரி உள்ளனர். இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. முன்னதாக இருவரிடமும் போதை மருந்து சோதனைக்காக அவர்களிடம் சிறுநீர் பெறப்பட்டு லேபிற்கு அனுப்பட்டது.

சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக ராகினி திவேதி, சஞ்சனா சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றனர். அவர்களை யாரெல்லாம் சிறையில் சந்திக்க வந்தார்கள் என்ற தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் சிறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தார். அதற்கு சிறை நிர்வாகி பதில் அளித்தார். அதில் கொரோனா தொற்று பரவல் காரணமாக யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. அதனால் இருவரையும் யாரும் சந்திக்கவில்லை என்றனர். செப்டம்பர் 25ம் தேதி கேட்ட தகவலுக்கு அக்டோபர் 12ம் தேதி தான் அதிகாரிகள் பதில் அனுப்பினார்களாம். அதேசமயம் தினசரி நாட் குறிப்பிலிருந்து அதற்கான சான்று எதையும் சிறை நிர்வாகி அனுப்பவில்லையாம்.

More News >>