ஓரினசேர்க்கையால் நடந்த விபரீதம்.. சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததால் பரபரப்பு..!
விழுப்புரத்தில் ஓரினசேர்க்கையில் ஈடுப்பட மறுத்த சிறுவனை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தேவன்ராஜ். இவருக்கு 13 வயதில் ஒரு ஆண் மகன் உள்ளார். இந்நிலையில் அக்டோபர் 9 ஆம் தேதி வீட்டில் இருந்த மகன் மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். இரவு ஆகியும் சிறுவன் வீடு திரும்பாத காரணத்தால் தேவன்ராஜ் பயந்து பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்பொழுது அச்சிறுவனின் போனை ஆய்வு செய்த போது கடைசியாக அச்சிறுவனிடன் போனில் பேசியவர் அதே பகுதியை சேர்ந்த கலைமணி என்பவரது மகன் அபிஷேக். பிறகு அந்த பையனை விசாரித்த போது சரியாக பதில் சொல்லாத காரணத்தால் போலீஸ் அபிஷேக் மீது சந்தேகப்பட்டு தீவீர விசாரணையில் இறங்கினார்கள்.
அப்பொழுது அபிஷேக் கூறியதாவது:- அந்த சிறுவனை கிராமத்தில் உள்ள பனை மரத்தில் கிளிகள் வரும். அதை பிடித்து நாம் வளர்க்கலாம் என்று கூறி அபிஷேக் அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுவனை அபிஷேக் ஓரினைசேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அந்த சிறுவன் மறுத்ததால் கோவத்தில் கழுத்தை நெரித்து கொன்று விட்டதாகவும் பிறகு சடலத்தை அதே கிராமத்தில் இருக்கும் சுடுகாட்டில் குழி தோண்டி புதைத்துவிட்டதாகவும் வாக்கு வாதத்தில் அபிஷேக் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார்கள் அபிஷேக் காட்டிய இடத்தை தோண்டி சடலத்தை மீட்டு பிரேத பிரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.