பிரபல சின்னத்திரை நடிகைக்கு கூடிய விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா??
யாரடி நீ மோகினி சீரியலின் வில்லியாக நடிக்கும் ஸ்வேதாவுக்கு இன்று திருமணம் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது.
தனியார் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமாகி தற்பொழுது வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் பெங்களூரில் வசித்து வருகிறார்.இவர் இந்த சீரியலில் வில்லியான ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் சொக்க வைக்கும் அழகு யாவரையும் கட்டிப்போட்டு விட்டது என்று தான் கூற வேண்டும். இவரது நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் அழகு வில்லியாக தமிழக மக்களின் மனதில் குடிபெயர்ந்து விட்டார். இவரது ரசிகர்கள் இன்ஸ்டாவில் எப்போ கல்யாணம் என்று கேட்டு கொண்டு இருந்தனர்.
ரசிகர்களின் வாய் முகுர்த்தம் பலித்தது போல் இன்று சைத்ராவுக்கு பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராகேஷ் சமலாவுடன் இனிதே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிவடைந்தது. இதனையொட்டி இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சைத்துவின் நெருங்கிய நண்பர்களான பூவே பூச்சூடவா சீரியலின் கதாநாயாகி ரேஷ்மாவும் மற்றும் செம்பருத்தி சீரியலின் நடிகை ஷபானா என்பவரும் தங்களது இன்ஸ்ட்டாவில் வெளியிட்டு வருகின்றனர். இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் பொருத்தமான ஜோடி என்றும் பலர் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.