கர்நாடகாவில் நித்யானந்தா நிலையில் சிக்கிய சாமியார்!
கர்நாடகாவில் நித்யானந்தா போல, நடிகை ஒருவருடன் படுக்கையில் இருந்த சாமியார் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஏலஹங்கா தாலுகாவில் உள்ள, மடேவங்காபுராவில் மடம் நடத்தி வருபவர் பர்வதாராஜ் சிவாச்சார்யா ஸ்வாமி. இவரின் மகன் நஞ்சேஷ்வர ஸ்வாமிஜி. இவர், தன் மடத்திலேயே நடிகை ஒருவருடன் படுக்கையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. இவர், 2011ம் ஆண்டு இந்த மடத்தின் தலைவராக முயன்றார். ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால், மடத்தின் தலைவராக ஆவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
முதலில் தயானந்த் என்ற பெயரில் இந்த சாமியார் வலம் வந்தார். தன் பெயரை நஞ்சேஷ்வர ஸ்வாமி என்று மாற்றிக் கொண்டார். இவர் மீது நில மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் உள்ளது. நித்யானந்த விவகாரம் போல கர்நாடகத்தில் இந்த வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.