பொறியியல் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கான பயிற்றுநர் பயிற்சி அறிவிப்பு!

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: இன்ஜினியரிங் பிரிவில் 120 (சிவில் 110, இ.இ.இ., 5, இ.சி.இ., 5,), டிப்ளமோ பிரிவில் 160 (சிவில் 150, இ.இ.இ., 5, இ.சி.இ., 5) என மொத்தம் 280 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் பிரிவுக்குத் தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., டிப்ளமோ பிரிவுக்குத் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ படிப்பும் முடித்திருக்க வேண்டும். 2017, 2018, 2019, 2020 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை: இன்ஜினியரிங் மாதம் ரூ. 4984, டிப்ளமோ மாதம் ரூ. 3542. பயிற்சி காலம்: ஓராண்டு.

வயது: அப்ரென்டிஸ் விதிப்படி உள்ளது.

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். முதலில் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் 07.11.2020க்குள்ளும், அடுத்து பொதுப்பணித்துறை இணையதளத்தில் 15.11.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் http://www.boat_srp.com என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பத்தின் அறிவிப்பு தகவல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/10/PWD_2020-21_Notification.pdf

More News >>