வயோதிகமே காரணம்... சென்னை அணிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சென்னை அணி வாழ்வா, சாவா போராட்டத்தில் விளையாடி வருகிறது. மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு சென்னை அணி களமிறங்கியது. கெய்க்வாட், ஜெகதீசன், இம்ரான் தாஹீர் அணியில் இடம்பெற்றனர். ஆனால் போட்டி தொடங்கி 3 ரன்கள் எடுப்பதற்கு முன்னதாகவே, சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. இதனால் சென்னை அணியின் வெற்றி கேள்விகுறியாகி உள்ளது. இதற்கிடையே, சென்னை அணி குறித்து, நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில், ``இதைக் கூற கஷ்டமாக தான் இருக்கிறது. எனினும் கூறியாக வேண்டும். இப்போது உள்ள நிலவரப்படி, நடப்பு சீசனில் இருந்து சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருக்கிறது. இந்த வார்த்தைகளை கடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் சொன்னதை வைத்தே கூறிவிடலாம். அவருடைய பெட்டியில் சென்னை அணியின் வாழ்நாள் முடிந்துவிட்டதாகவே அவர் பேசியிருக்கிறார்.

இதை தான் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் எல்லோரும் கூறி வருகிறோம். சென்னை ஒரு வயதான அணி. ஒரு கட்டத்தில் வயோதிகம் அணியை வீழ்ச்சிக்கு தள்ளும் என்பது எதிர்பார்த்தது தான். தற்போதைய சீசனில் வயோதிக சிக்கலை சென்னை சந்தித்துள்ளது. சென்னை அணியின் தற்போதைய நிலைமைக்கு வயோதிகமே காரணம். டூபிளஸி, தீபக் சஹாரை தவிர மற்ற அனைவரும் சொதப்புகின்றனர். இதை தவிர சொல்ல வேறொன்றும் இல்லை" எனக் கட்டமாக பேசியுள்ளார்.

More News >>