இந்திய உளவு விமானியாகும் 3 பெண்கள்... விமானப்படையில் புதிய வரலாறு!
இந்திய கடற்படையின் உளவு விமானத்தின் விமானிகளாக முதன்முறையாக 3 பெண்கள் பணியாற்ற தயாராக இருக்கின்றனர். லெப்டினன்ட் திவ்யா ஷர்மா, லெப்டினன்ட் சுபாங்கி ஸ்வரூப் மற்றும் லெப்டினன்ட் ஷிவாங்கி ஆகிய மூவர்தான் அவர்கள். இந்திய கடற்படை விமானிகளாக செயல்பட தேர்வாகிய இந்த மூன்று பெண்களும் கொச்சியில் உள்ள விமனப்படை பயிற்சி மையத்தில் டோர்னியர் (Dornier aircraft) விமானத்தில் விமானியாக பயிற்சி பெற்றனர்.
இதற்கிடையே, உளவு விமானத்தின் விமானிகளாக இந்த 3 பெண்களும் செயல்பட உள்ளது குறித்து பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் பேசும்போது, ``இந்த 3 பெண் விமானிகளும் 6 விமானிகள் கொண்ட DOFT குழுவில் பயிற்சி எடுத்துள்ளனர். இவர்கள் முழுமையாக கடற்படையின் உளவு, மீட்பு மற்றும் போர் நேரத்தில் எதிரிகளை தாக்குவதற்கான பயிற்சி பெற்றுள்ளனர்.
எனினும் மூவரில், லெப்டினண்ட் ஷிவாங்கியே முதலில் இந்த தகுதியை பெற்றார். அதற்கடுத்த 15 நாளில் திவ்யா ஷர்மாவும், சுபாங்கி ஸ்வரூப்வும் தகுதி பெற்றனர். இவர்கள் முழு தகுதியையும் பெற்று Maritime Reconnaissance Mission என்னும் MR மிஷனில் செயல்பட தயாராக இருக்கின்றனர்" எனக் கூறியுள்ளார்.