இரத்த அழுத்தத்தையும் ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்தும் கூந்தல், சரும அழகை கூட்டும்.

பெருங்காயம் அனைவர் வீட்டுச் சமையலறையிலும் தவறாது இருக்கும் பொருள். இது உணவுக்கு நறுமணத்தை அளிக்கக்கூடியது. முன்பு இது வெளிநாடுகளிலிருந்து சந்தைக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது இமாசலப் பிரதேசத்திலுள்ள லாஹால் பள்ளத்தாக்கில் பயிரிடப்படுகிறது. பெருங்காயம் உடலுக்கு பல நன்மைகளை செய்யக்கூடியது.

செரிமானம்

அஜீரணம், உப்பிசம் மற்றும் மலம் கழிப்பதில் பிரச்னை உள்ளவர்களுக்கு பெருங்காயம் பேருதவி செய்யும். பெருங்காயம் செரிமானத்தை ஊக்குவிப்பதோடு வயிற்றிலிருந்து வாயுவை பிரிக்கிறது.

இரத்த அழுத்தம்

பெருங்காயத்தில் காமரின் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக பேணுகிறது. ஆகவே, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிப்புற்றுள்ளவர்களுக்கு நன்மை செய்கிறது.

ஆஸ்துமா

பெருங்காயத்துக்கு அழற்சிக்கு எதிராக செயல்படும் தன்மை உள்ளது. இது சுவாச மண்டல பிரச்னைகளை தீர்க்கிறது. ஆஸ்துமா, சளி மற்றும் இருமல் உள்ளவர்களுக்கு பெருங்காயம் நிவாரணம் அளிக்கிறது.

கூந்தல்

பெருங்காயம், பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதுடன், கூந்தல் மற்றும் சருமத்திற்கு மினுமினுப்பை அளிக்கிறது.

More News >>