பிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை?
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில், இருக்கு ஆனா இல்ல என்ற வசனம் பேசி காதல் விளையாட்டு நடத்துவார். அதை நிஜத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது பிரபல நட்சத்திர ஜோடி. அவர்கள் வேறு யாருமல்ல பிரபாஸ், அனுஷ்கா தான் பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பிரபலமானாலும் அதற்கு முன்பே இவர்கள் இணைந்து தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் அனுஷ்கா ஜோடி பற்றி தீவிரமாக காதல் கிசுகிசு பரவியது. இருவரும் பல இடங்களில் ஜோடியாகக் காணப்பட்டனர்.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இல்லத்திருமணம் ஒன்றிலும் பிரபாஸ், அனுஷ்கா புதுமண ஜோடிபோல் கலந்துகொண்டு அருகருகே நின்று ஆசி கூறினர். இதையடுத்து அவர்கள் காதல் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் அனுஷ்கா இதனை மறுத்து வந்தார். நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே எங்களுக்குள் காதல் இல்லை என்றார். காதல் இல்லை என்று அனுஷ்காவின் உதடு உச்சரித்தாலும் உள்ளம் காதலால் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது அவர் பிரபாஸுக்காக பிறந்தாளில் வெளியிட்டிருக்கும் மெசேஜ் எடுத்துக் காட்டுகிறது.
பிரபாஸுக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி அவர் நடிக்கும் ராதே ஷ்யாம் படக் குழு ஸ்பெஷல் மோஷன் போஸ்டரை வெளியிட்டது. அதில் பிரபாஸ், பூஜா ஹெக்டே காதலில் லயித்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.அந்த போஸ்டரை அனுஷ்கா வெளியிட்டு அதில் தன்னுடைய காதலை குழைத்து மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பப்ஸு (பிரபாஸுக்கு அனுஷ்கா வைத்த செல்லப்பெயர்).. முழுவதும் காதல். ராதே ஷ்யாம் ஸ்டிலும் உணர்வும் தோற்றமும் ஒட்டு மொத்த காதல்.. ஆவலாக எதிர்பார்க்கிறேன். யுவி கிரியேஷன். ராதா கிருஷ்ணா (இயக்குனர்) பூஜா (ஹீரோயின்) உங்களின் நடத்திர தேர்வு படக் குழு எல்லாமே ரொம்பவும் சிறப்பு எனத் தெரிவித்திருக்கிறார்.
பிரபாஸுக்கு 41வது வயது பிறந்திருக்கிறது. இன்னமும் பிரமச்சாரியாக இருக்கிறார். அனுஷ்காவுக்கு 38 வயதாகிறது. அவரும் இன்னும் பிரமச்சாரிதான் இருவருக்கும் குடும்பத்தினர். எத்தனையோ மணமகளும், மணமகனும் பார்த்து இருவரை திருமணம் செய்துக் கொள்ள வலியுறுத்தியும் இருவருமே திருமணத்துக்கு ஓகே சொல்லவில்லை. அனுஷ்கா, பிரபாஸ் காதலுக்கு குடும்பத்தினர் தடையாக இருப்பதே இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் வைராக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்றும் திரையுலகில் ஒரு பேச்சு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.