தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை!இன்றைய தங்கத்தின் விலை 24-10-2020
பங்குச்சந்தையின் இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தது. நேற்றும் சந்தை விலை ஏற்றத்துடனே முடிந்தது. அதே போல் வாரத்தின் கடைசி மற்றும் விடுமுறை நாளான இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரங்களில் கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டி வழக்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற புறக் காரணிகளால் தங்கத்தில் விலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாக வரத்தகத்தினர் கூறுகின்றனர், இருந்தாலும் உலக சந்தையில் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தின் விளைவின் பிரதிபலிப்பு தான் இந்த விலை குறைவு என்கிறார்கள் சிலர்.எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4724 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.24 விலை குறைந்துள்ளது, எனவே ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4700 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -47008 கிராம் ( 1 சவரன் ) - 37600
தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5102 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.14 குறைந்து, கிராமானது ரூ.5088 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 50888 கிராம் - 40704
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 30 பைசா விலை குறைந்து, கிராம் 67 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 67000 க்கு விற்பனையாகிறது.