டீ கடை வைக்கும் பிரபல நடிகை...
நடிகை கீர்த்தி சுரேஷ் டீ கடை வைப்பது எதற்கு என்று ஆச்சரியப்பட வேண்டாம். அவர் நடிக்கும் புதிய தெலுங்கு படம் மிஸ் இந்தியா. இப்படத்தில் அவர் டீ கடை வைத்து தொழில் அதிபர் ஆகும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நரேந்திரா நாத் இயக்குகிறார். நதியா, ஜெகபதிபாபு, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று நெட் பிளிக்ஸில் வெளியானது.
ட்ரெய்லரில் கீர்த்தி கெத்து காட்டி இருக்கிறார். ஜெகபதி பாவுடன் அவர் சவால் விட்டு நடிக்கும் காட்சிகள். டீ கடை ஆரம்பித்து அதற்கு பிரண்ட் நேமாக மிஸ் இந்தியா என டைட்டில் பெறுவது எனப் பலவித கோணங்களில் தனது அசத்தலான நடிப்பில் அசர வைத்திருக்கிறார் கீர்த்தி.
இவர் தமிழில் வேகமாக முன்னேறி வந்துக்கொண்டிருந்தார். திடீரென்று இந்தி படத்தில் நடிக்க அழைப்பு வரவே பாலிவுட் சென்றார். இந்தி என்றதும் உடல் தோற்றத்தை ஸ்லிம் ஆக்குகிறேன் என்று சொல்லி ஆளே அடையாளம் தெரியாதளவுக்கு மெலிந்தார். ஆனால் இந்த தோற்றத்தில் தாங்கள் ரெடி செய்திருக்கும் கதையில் நடிக்க முடியாது என்று இந்தி பட நிறுவனம் சொல்லி அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கத் திரும்பி வந்தார். அவர் ஒல்லிபிச்சான்க்கு பிறகு நடித்த பெண் குயின் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது தமிழ், தெலுங்கு என 7 படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.