ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் கமிட்டான பாகுபலி ராணா!
ஹாலிவுட் சூப்பர்ஹிட் படமான 'அவெஞ்சர்ஸ்' திரைப்படத்தில் நடிகர் ராணா இணைந்துள்ளார்.
'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' என்ற ஹாலிவுட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்தியாவில் இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்திய சந்தையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்திரைப்படத்தி தயாரிப்பாளர் தரப்பு நடிகர் ராணாவை இப்படத்துடன் இணைத்துள்ளது.
நடிகர் ராணா பாகுபலி 1, 2 திரைப்படங்கள் மூலம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இந்திய சந்தை விற்பனைக்காக நடிகர் ராணாவை அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் வில்லன் தானோஸ் கதாபாத்திரத்துக்கு டப்பிங் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
நடிகர் ராணாவும் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றுக்கு டப்பிங் பேசியது புது அனுபவமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com