ஏலக்காய் ஏன் தினமும் கட்டாயம் உணவில் சிறிதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்?..தெரிந்து கொள்ளலாம் வாங்க..

ஏலக்காயில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் இதனை தினமும் உணவில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மசாலா பொருள்களை தான் சமையலுக்கு உபயோகம் செய்வார்கள். ஏனென்றால் மசாலா பொருள்களில் அளவு கடந்த மருத்துவ குணங்கள் உள்ளது. மசாலா பொருளில் விலை உயர்ந்தது எதுவென்றால் அது ஏலக்காய் தான்.. இருப்பினும் இதை தினமும் சிறிதாவது பயன்படுத்த வேண்டும். இதை சாப்பிடுவதால் தொண்டை சார்ந்த பிரச்சனைகள்,நோய் தொற்றுகள் ஆகியவைக்கு தீர்வு காணலாம்.. ஏலக்காவை அனைவரும் வாசனை பொருள் என்று நினைத்து தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இதில் இருக்கும் மருத்துவ குணத்தை தெரிந்தால் நீங்களே ஆச்சிரிய படுவீர்கள். சரி வாங்க ஏலக்காவில் இருந்து நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்..

செரிமானம்:-ஆரோக்கியமான செரிமானத்திற்கு ஏலக்காய் பெரும் பங்கு வகிக்கின்றது. நெஞ்சு எரிச்சல் வயிற்று புண் ஆகியவை அறவே நீக்குகிறது. அமில பிரச்சனையால் தொண்டை எரிச்சல், வயிறு வலித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனை சீர் செய்யவும் ஏலக்காய் உதவுகிறது. இதில் இயற்கை குணம் மதிப்பற்றது. இதை சாப்பிடுவதால் தேவையில்லாத நோய்கள் நம்மை நெருங்காது.ஆஸ்துமா:-ஏலக்காய் சாப்பிடுவது மூலம் சுவாச குழாவை சுத்தம் செய்கிறது. இதனால் சுவாசிக்க எந்த வித தடையும் ஏற்படாமல் ஆஸ்துமாவை நீக்குகிறது. மூச்சு திணறல் ஆகியவை குணமாக்குகிறது. மார்பில் சளி சேராமல் பாதுக்காக்கும். ஏலக்காய் சாப்பிடுவதால் முகத்தில் பருக்குகள், கரும்புள்ளிகள் ஆகியவை தடுக்கிறது. மற்றும் கூந்தல் நீளமாகவும் வளர உதவுகிறது.

More News >>